Advertisement

அருமையான சுவையில் சேமியா வெஜிடபிள் உப்புமா செய்முறை

By: Nagaraj Thu, 16 June 2022 8:01:57 PM

அருமையான சுவையில் சேமியா வெஜிடபிள் உப்புமா செய்முறை

சென்னை: சேமியா வெஜிடபிள் உப்புமாவை அசத்தலாக செய்து தாருங்கள். உங்கள் குடும்பத்தினர் பாராட்டுவார்கள். உப்புமாவில் காய்கறிகளை சேர்த்து செய்வதால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும் உப்புமாவில் சேமியா உப்புமா மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்: சேமியா - 1 பாக்கெட், வெங்காயம் - 1, பச்சை பட்டாணி - 1/2 கப், கேரட் - 1, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 3, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது, வரமிளகாய் - 1 , உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - 1 1/2 கப்

semia,onions,carrots,green peas,green chillies,turmeric ,சேமியா, வெங்காயம், கேரட், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள்

செய்முறை:வெங்காயம், தக்காளி, கேரட், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்த பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் அத்துடன் மஞ்சள் தூள், கேரட், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

பிறகு அதில் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை வேக வைத்து கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால், சேமியா வெஜிடபிள் உப்புமா ரெடி.

Tags :
|
|