Advertisement

வித்தியாசமான சுவையில் ரவை மசாலா உருண்டை செய்வது எப்படி?

By: Monisha Tue, 27 Oct 2020 11:14:08 AM

வித்தியாசமான சுவையில் ரவை மசாலா உருண்டை செய்வது எப்படி?

ரவை கொண்டு தயாரிக்கப்படும் வித்தியாசமான ரவை மசாலா உருண்டை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
ரவை – 1 கப்
காயத்தூள் – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தொக்கு செய்ய
தக்காளி – 2
வெங்காயம் – 1
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – 1 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு

semolina,spices,tomatoes,onions,coriander ,ரவை,மசாலா,தக்காளி,வெங்காயம்,கொத்தமல்லி

செய்முறை
முதலாவது ரவை மற்றும் சீரகம் ஆகியவற்றை கடாயில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். அதன்பின் இதை ஆற வைத்து விடுங்கள். அடுத்ததாக கடாய் வைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதித்ததும் அந்த தண்ணீரில் எண்ணெய், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து விடுங்கள். பின் வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறிக் கொடுங்கள். ரவை கட்டிகளாகமல் கிளருங்கள். தண்ணீர் இறுகி பூரி மாவு பிசையும் பதத்திற்கு வரும் போது அடுப்பை அணைத்து சில நிமிடங்களுக்கு மூடி வைத்து விடுங்கள். அதன் பின் இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி அதை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வையுங்கள்.

அதன்பின் தொக்கு செய்வதற்கு வேண்டிய கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி தாளித்து அதில் வெங்காயம் போட்டு வதக்குங்கள். வதங்கியதும் தக்காளியை அரைத்து அதில் ஊற்றுங்கள். ஊற்றிய பின் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து அரை கிளாஸ் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து விடுங்கள். அதன் பின் கொத்தமல்லி தழையை சேர்த்து விடுங்கள். குழம்பு கொதித்து தண்ணீர் வற்றி கெட்டி பதத்திற்கு வந்ததும் வேக வைத்து வைத்திருக்கும் ரவை உருண்டைகளை சேர்த்து மசாலாக்கள் சேருமாறு நன்கு பிரட்டி எடுங்கள். சுவையான ரவை மசாலா உருண்டை தயார்.

Tags :
|
|