Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • பெண்கள் தங்கள் காதலனுடன் சொல்லவே கூடாத சில விஷயங்கள்!

பெண்கள் தங்கள் காதலனுடன் சொல்லவே கூடாத சில விஷயங்கள்!

By: Monisha Thu, 05 Nov 2020 1:20:53 PM

பெண்கள் தங்கள் காதலனுடன் சொல்லவே கூடாத சில விஷயங்கள்!

அனேகமாக பெண்கள் தங்கள் காதலனுக்கு உண்மையாக தான் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் காதலனுடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாமா? என்ற கேள்வி எழலாம். இந்த பதிவில் பெண்கள் தங்கள் காதலனுடன் சொல்லவே கூடாத சில விஷயங்களை குறித்து பார்க்கலாம்.

பழைய காதல்
உங்கள் காதலனின் முன்னாள் காதலி பற்றி பேசுவதை தவிருங்கள். ஒரு நல்ல காரணத்திற்காக, பழைய விஷயங்களை பற்றி பேசாமல் இருப்பதே நல்லது. அவரது முன்னாள் காதலி, உங்களின் மோசமான கவலையாக இருக்கலாம். ஆனால், அவரது பேஷன் சென்ஸ் அல்லது அவரது தோற்றங்களைப் பற்றி விவாதிப்பது, உங்களை உங்கள் காதலனின் பார்வையில் கொஞ்சம் குறைத்து எடை போட வழிவகுக்கும். மேலும், உங்களை பற்றிய நல்ல அபிப்ராயத்தை மாற்றிவிடும். உங்கள் காதலனின் முன்னாள் காதலி பற்றி பேசுவதனால், நீங்கள் இருவரும் உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் உறவின் வளர்ச்சியை தடுக்க நீங்களே வாய்ப்பை ஏற்படுத்தி கொள்கிறீர்கள்.

girls,boyfriend,relationship,fights,friends ,பெண்கள்,காதலன்,உறவு,சண்டை,நண்பர்கள்

குடும்பத்தை பற்றி பேச கூடாது
உங்கள் காதலனின் குடும்பத்தை, குறிப்பாக அவரது தாயை நீங்கள் விரும்பவில்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். அது ஆண்களுக்கு பிடிக்காது. தாய் அவர்களுக்கு மிகவும் உயிரானவர்கள். நம் பெற்றோர் என்று வரும்போது, நாம் அனைவரும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவது என்பது பொதுவான ஒன்று தான். அவரது பெற்றோருடன் ஆரோக்கியமான பேச்சில் ஈடுபடுங்கள். சில நேரங்களில் அவரது தாயின் கருத்துக்களால் உங்கள் மனம் புண்படலாம்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அதை காரணம் காட்டி கோவப்பட்டு சண்டைபோடுவதற்கு பதிலாக, இருவரும் பொறுமையாகப் பேசித் தீர்த்து கொள்வது தான் நல்லது. அவர், அவரது பெற்றோருடன் இருக்கும் கருத்து வேறுபாடுகளைப் பற்றி விவாதிப்பது இயல்பு. ஆனால், அவர்களைப் பற்றி புகார் செய்யும்போது நீங்கள் அமைதியாக இருப்பது தான் நல்லது. ஏனெனில் நீங்கள் உங்கள் கருத்துக்களை கூறினால் அது அவர்களுக்கு தவறாக தெரியலாம்.

girls,boyfriend,relationship,fights,friends ,பெண்கள்,காதலன்,உறவு,சண்டை,நண்பர்கள்

நண்பர்கள்
உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இடையில் இருக்கக்கூடிய ரகசியத்தை பற்றி ஒருபோதும் உங்கள் காதலனிடம் சொல்லாதீர்கள். நீங்கள் உங்கள் காதலனுடன் பகிர்ந்து கொள்ளும் சிறிய விஷயங்கள் தான் ஓர் நல்ல ஆரோக்கியமான உறவுகளுக்கு வழி வகுக்கிறது. அது உங்கள் இருவருக்கும் இடையிலான பிணைப்பை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வலுவான நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.

ஆனால், உங்களின் நெருங்கிய நண்பர் தனது ஆழ்ந்த ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதை பற்றி நீங்கள் உங்கள் காதலனுடன் கிசுகிசுக்க முடிவு செய்வது நல்ல விஷயம் அல்ல. அவ்வாறு செய்வது உங்கள் நண்பரின் நம்பிக்கையை மீறுவதாகும். உங்கள் காதலனை நீங்கள் நம்புவது சரி தான். ஆனால், அதற்காக உங்கள் நண்பரின் நம்பிக்கையை நீங்கள் உடைக்க நினைப்பது தவறு.

girls,boyfriend,relationship,fights,friends ,பெண்கள்,காதலன்,உறவு,சண்டை,நண்பர்கள்

பணம்
உங்கள் காதலனின் செலவுகள் பற்றி பேசுவதை தவிருங்கள், பணம் வரவு செலவு பற்றியெல்லாம் பேசாதீர்கள். ஒரு சரியான உறவு என்பது, இருவரும் ஒரே பாதையில் நடப்பது தான்; மற்றும் இருவரும் ஒரே பக்கத்தில் இருப்பது. ஆனால், உங்கள் காதலனின் செலவுகளைப் பற்றி விவாதிப்பது நல்ல யோசனையாக இருக்காது.

ஏனெனில், அவர்கள் ஏதேனும் விலையுயர்ந்த கேஜெட்டை வாங்குவதில் பணத்தை செலவிடுவது, மற்றும் ஒரு வார இறுதியில் அவர்களின் நண்பர்களுடனான பயணத்தின் போது அவர்கள் அதிக பணம் செலவழித்ததை பற்றி கேட்பது போன்ற விஷயங்களை எந்த ஒரு காதலரும் விரும்பமாட்டார். உங்கள் காதலன், வார இறுதியில் அவருக்கு ஏற்றவாறு சந்தோஷமாக செலவிட்டு மகிழ வேண்டும் என்று விரும்புவதில் எந்த தவறும் இல்லை. அது உங்களின் முக்கிய கவலையாகவும் இருக்கக்கூடாது.

Tags :
|
|