Advertisement

புளியந்தளிர் பருப்புக்கூட்டு செய்து பாருங்கள்!!!

By: Nagaraj Sun, 05 June 2022 2:49:53 PM

புளியந்தளிர் பருப்புக்கூட்டு செய்து பாருங்கள்!!!

சென்னை: புளியந்தளிரை வைத்து பருப்புக் கூட்டு செய்து பார்த்து இருக்கிறீர்களா. உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த்து. அதை செய்யும் முறை குறித்து உங்களுக்காக.

தேவையானவை: புளியந்தளிர் - அரை கப், துவரம்பருப்பு - அரை கப், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2, பூண்டு - 2 பல், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

தாளிக்க: குழம்பு வடகம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து.

tamarind sprigs,onions,green chillies,garlic,tomatoes,salt ,புளியந் தளிர், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி, உப்பு

செய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவிடவும். வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகிய வற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.

வெந்த துவரம்பருப்புடன் புளியந் தளிர், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி, உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து வேகவிட்டு நன்கு மசிக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் குழம்பு வடகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மசித்து வைத்த கலவையில் சேர்த்துக் கலந்து பரிமாறவும். அருமையான சுவையில் புளியந்தளிர் பருப்பு கூட்டு ரெடி.

Tags :
|
|