Advertisement

இடியாப்பத்திற்கு சரியான டிஷ் கத்திரிக்காய் கோசுமல்லி செய்முறை!!!

By: Nagaraj Fri, 10 June 2022 11:38:15 PM

இடியாப்பத்திற்கு சரியான டிஷ் கத்திரிக்காய் கோசுமல்லி செய்முறை!!!

சென்னை: கோசுமல்லி செய்து சாப்பிட்டு பாருங்கள். ருசியில் மயங்கி விடுவீர்கள்.

தேவையானவை: பெரிய, விதையுள்ள கத்திரிக்காய் 2, சின்ன வெங்காயம் 15, பச்சை மிளகாய் 2, தக்காளி 1, உப்பு தேவைக்கேற்ப, புளி எலுமிச்சை அளவு, மல்லித்தழை சிறிதளவு,

தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, காய்ந்த மிளகாய் 2, எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்.

idiyappam,chettinad,potatoes,eggplant,idli,dosa ,இடியாப்பம், செட்டிநாடு, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், இட்லி, தோசை

செய்முறை: சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறவும். தக்காளி பொடியாக நறுக்கவும். உப்பையும் புளியையும் 2 கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். கத்திரிக்காயைக் காம்பை நீக்கி, நான்காக நறுக்கி, வேகவைத்துக் கொள்ளவும்.

வெந்ததும், தோல் நீக்கவும். கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரில், வெந்த கத்திரிக்காயைப் போட்டு, கையால் நன்கு கரைத்து, சக்கையைப் பிழிந்து எடுத்துவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிப்பவற்றைப் போட்டு சிவந்ததும், தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், கரைத்து வைத்திருக்கும் புளி + கத்திரிக்காய் கலவையை ஊற்றி, கொதித்ததும் மல்லித்தழையைத் தூவி இறக்கவும்.

விருப்பப்பட்டவர்கள், ஒரு உருளைக்கிழங்கை வேகவைத்து, அதையும் கத்திரிக்காயோடு சேர்த்துப் பிசைந்துவிடலாம். இட்லி, தோசை, இடியாப்பத்துக்கு, செட்டிநாட்டில் மிகவும் பிரபலமான சைட் டிஷ் இது.

Tags :
|