Advertisement

குடும்பத்தினரை அசத்த நாட்டுக்கோழி இஞ்சி வறுவல் செய்து பாருங்கள்

By: Nagaraj Mon, 08 Aug 2022 9:45:21 PM

குடும்பத்தினரை அசத்த நாட்டுக்கோழி இஞ்சி வறுவல் செய்து பாருங்கள்

சென்னை: நாட்டுக்கோழி இஞ்சி வறுவல் செய்து பாருங்கள். ருசியில் அசந்து போய்விடுவீர்கள்.

தேவையானவை:

நாட்டுக்கோழி கறி - 500 கிராம்
மிளகாய்தூள் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 100 மில்லி
இஞ்சி சாறு - 100 கிராம்
மஞ்சள் தூள் - 3 தேக்கரண்டி
வினிகர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு

ginger juice,turmeric powder,vinegar,salt,curry leaves ,இஞ்சி சாறு, மஞ்சள் தூள், வினிகர், உப்பு, கறிவேப்பிலை

செய்முறை: கோழி கறியைச் சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுக்கவும். இஞ்சியை தோல் நீக்கி, சாறு பிழிந்து அதில் மஞ்சள் தூள், உப்பு, வினிகர், மிளகாய் தூள் போட்டு கலக்கிக் கொள்ளவும்.

அதனுடன் கோழி கறியையும் போட்டு நன்றாக பிசைந்து பிறகு கறி மசால் பொடியையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் பிசறிய கோழிக் கறியை கொட்டி வதக்கவும்.

கறி பொன்னிறமாக வந்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும். பிறகு இறக்கி விடவும்.

Tags :
|