Advertisement

தேங்காய் பால் ரசம் செய்து பாருங்கள்... குடும்பத்தினர் பாராட்டுக்களை பெறுங்கள்

By: Nagaraj Wed, 21 Sept 2022 9:21:03 PM

தேங்காய் பால் ரசம் செய்து பாருங்கள்... குடும்பத்தினர் பாராட்டுக்களை பெறுங்கள்

சென்னை: தேங்காய்ப் பால் ரசம் செய்து இருக்கிறீர்களா. செய்து பாருங்கள். ருசியில் இன்னும், இன்னும் என்று சாப்பிடுவீர்கள்.

தேவையானப் பொருட்கள்

தேங்காய் – ஒரு மூடி
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – 3
மிளகு – ஒன்றரை தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

coconut,tamarind,dry chillies,pepper,mustard ,தேங்காய், புளி, காய்ந்த மிளகாய், மிளகு, கடுகு

செய்முறை: தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக் கொள்ளவும். தண்ணீரில் புளியை ஊறவைத்து கரைத்து பாலுடன் சேர்த்து, உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, மிளகாயைக் கிள்ளிப் போட்டு சிவந்ததும், மிளகைப் போடவும். மிளகு படபட வென்று வெடித்ததும் ரசக் கரைசலை ஊற்றி நுரை கூடியதும் ஒரு முறை கிண்டி விட்டு இறக்கவும்

கூட்டு வகைகளை வைத்துக் கொண்டு சாப்பிட இந்த ரசம் நன்றாக இருக்கும். இந்த ரசம் கொதித்து விட்டால் திரிந்த பால் போல நன்றாக இருக்காது. எனவே அதற்கு முன்பே இறக்கி விட வேண்டும்.

Tags :
|