Advertisement

புளிப்பு மாங்காய் தொக்கு செய்து பாருங்கள்... ருசி பிரமாதமாக இருக்கும்

By: Nagaraj Sat, 01 Oct 2022 7:04:17 PM

புளிப்பு மாங்காய் தொக்கு செய்து பாருங்கள்... ருசி பிரமாதமாக இருக்கும்

சென்னை: புளிப்பு மாம்பழ மாங்காய் தொக்கு செய்து பாருங்கள். ருசி பிரமாதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்
புளிப்பு மாங்காய் - 1புளிப்பு மாம்பழம் - 2வெந்தயம் - 1/2 தேக்கரண்டி (கருகாமல் வறுத்து பொடி செய்தது)மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டிவெல்லம் (துருவியது) - 1 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு

தாளிக்க
நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டிகடுகு - 1/2 தேக்கரண்டிபெருங்காயப் பொடி - 2 சிட்டிகை

mango,mustard,asparagus,jaggery,salt ,மாங்காய், கடுகு, பெருங்காயம், வெல்லம், உப்பு

செய்முறை: மாங்காய், மாம்பழம் இரண்டையும் தோலெடுத்து பொடியாக நறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, தாளிக்க கொடுத்து உள்ளவைகளைச் சேர்த்து தாளித்து, அதனுடன் மாங்காய், மாம்பழம் இரண்டையும் சேர்த்து, வெந்தயப்பொடி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.

கடைசியாக வெல்லம் சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். சூடு ஆறியதும் பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் வைத்து கொள்ளவும். தேவைப்படும் போது எடுத்து சாப்பிடலாம். ருசியில் மயங்கி விடுவீர்கள்.

Tags :
|