Advertisement

ஸ்பெஷல் மிளகாய் கிள்ளி சாம்பார் செய்து பாருங்கள்

By: Nagaraj Sat, 06 Aug 2022 10:33:33 PM

ஸ்பெஷல் மிளகாய் கிள்ளி சாம்பார் செய்து பாருங்கள்

சென்னை: ஸ்பெஷல் மிளகாய் கிள்ளி சாம்பார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - 1கப்வெங்காயம் - 3தக்காளி - 4பச்சை மிளகாய் - 4காய்ந்த மிளகாய் - 6 பெருங்காயம் - 1/2டீஸ்பூன்பூண்டு – 6 பல் கடுகு - 1டீஸ்பூன்உளுத்தம் பருப்பு - 1/4டீஸ்பூன்சீரகம் தூள் - 1/4டீஸ்பூன்வெந்தயம் - 1/4 டீஸ்பூன்புளி - நெல்லிக்காய் அளவு கருவேப்பிலை - 10கொத்தமல்லி - சிறிதுஎண்ணெய் – 2 டீஸ்பூன்உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 1/2டீஸ்பூன்நெய் - 2 டீஸ்பூன்

lentils,chili pepper sambar,tamarind juice,dal,cumin powder,mustard ,பருப்பு, மிளகாய் கிள்ளி சாம்பார், புளிச்சாறு, பருப்பு, சீரகத்தூள், கடுகு

செய்முறை:முதலில் குக்கரில் துவரம் பருப்பை நீரில் கழுவிப் போட்டு, அத்துடன்பெருங்காயத் தூள் மஞ்சள் தூள் பச்சை மிளகாய் பூண்டு தக்காளி-3 சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு, சீரகத்தூள், வெங்காயம் -3 தக்காளி -1வதக்கிக் கொள்ளவும். மிளகாய் -1/2டீஸ்பூன் சேர்த்து கிளறி, தண்ணீர், புளிச்சாறு சேர்த்து, மூடி வைத்து நன்கு வேக வைக்க வேண்டும். பருப்பை மசித்து ஊற்றி ஒரு கொதி வந்ததும் நெய் ஊற்றி கொத்தமல்லியைத் தூவி இறக்கவும் ஸ்பெஷல் மிளகாய் கிள்ளி சாம்பார் தயார்.

Tags :
|