Advertisement

மீல் மேக்கர் குழம்பு செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்

By: Nagaraj Sun, 05 June 2022 2:49:43 PM

மீல் மேக்கர் குழம்பு செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்

சென்னை; மீல் மேக்கரை வெஜ் பிரியாணியில் சேர்த்து பார்த்திருப்பீர்கள். ஆனால் அதை வைத்து பலவகை உணவுப்பொருட்கள் செய்யலாம். அந்தவகையில் மீல் மேக்கரை வைத்து குழம்பு எப்படி ருசியாக செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை: சோயா உருண்டைகள் - முக்கால் கப், வெங்காயம் - 1, தக்காளி - 3, இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன், வறுத்துப் பொடித்த சீரகம் - 2 டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.

turmeric,chili,curry,coriander,salt,tomatoes ,மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, அரைத்த தக்காளி

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். சோயாவைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடம் வைத்திருந்து, நன்றாகப் பிழிந்து கொள்ளவும்.

கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு 2 நிமிடம் வைத்திருந்து எடுத்து, தோலுரித்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு போட்டு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.

இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, அரைத்த தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வந்ததும், சோயா உருண்டைகளை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் (தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்) விட்டு, வறுத்துப் பொடித்த சீரகத்தைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். அருமையான மீல் மேக்கர் குழம்பு ரெடி.

Tags :
|
|
|