- வீடு›
- சமையல் குறிப்புகள்›
- குழந்தைகள் ஆரோக்கியத்தை உயர்த்து வெஜ் முட்டை சப்பாத்தி
குழந்தைகள் ஆரோக்கியத்தை உயர்த்து வெஜ் முட்டை சப்பாத்தி
By: Nagaraj Wed, 22 June 2022 08:36:47 AM
சென்னை: வெஜ் முட்டை சப்பாத்தி செய்து பார்த்து இருக்கீங்களா. அருமையான ருசியில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வெஜ் முட்டை சப்பாத்தி செய்முறை உங்களுக்காக.
தேவையான பொருள்கள் -
சப்பாத்தி - 3
முட்டை - 1
காலி பிளவர் - 2 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - சிறிது
மல்லித்தழை - சிறிது
தாளிக்க -
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
செய்முறை: சப்பாத்தியை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயம், காலிபிளவர், மல்லித்தழை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
அடுப்பில்
ஒரு கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை
உடைத்து எண்ணெய்யில் ஊற்றி அதனுடன் சிறிது உப்பும் சேர்த்து பொடிமாஸ்
செய்து தனியே வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் அதே கடாயை வைத்து
மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு
பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் அதனுடன் 1/4 கப் தண்ணீரும்,
காலிபிளவர், மற்றும் சிறிது உப்பும் சேர்த்து கிளறி அடுப்பை சிம்மில்
வைத்து மூடி வைக்கவும்.
காலிபிளவர் வெந்ததும் மிளகாய் தூள்,
காஷ்மீரி மிளகாய் தூள், தக்காளி சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன்
முட்டை பொடிமாஸ், சப்பாத்தி துண்டுகள் சேர்த்து நன்றாக கிளறவும்.
இறுதியில்
மல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான வெஜ்
முட்டை சப்பாத்தி ரெடி. காலை டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில்
வைத்தும் கொடுக்கலாம்.