Advertisement

சுவையான முறையில் வெள்ளை குருமா செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Sat, 06 Aug 2022 10:33:43 PM

சுவையான முறையில் வெள்ளை குருமா செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: சுவையான வெள்ளை குருமா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். சப்பாத்தி, பூரி ஆகியவற்றுக்கு சரியான சைட் டிஷ்.

தேவையான பொருட்கள்:
எண்ணெய் 2டீஸ்பூன்பிரியாணிஇலை 1வெங்காயம் 1தக்காளி 1பட்டை 1ஸ்டார் 1ஏலக்காய் 2லவங்கம் 2கொத்தமல்லி ஒரு கைப்பிடிகேரட் 50கிராம்பீன்ஸ் 50கிராம்பட்டாணி 20கிராம்உருளைக் கிழங்கு 3

அரைக்க வேண்டிய பொருட்கள்:
பச்சைமிளகாய் - 6மல்லி - 1ஸ்பூன்சோம்பு - 1ஸ்பூன்சீரகம் - 1ஸ்பூன்மிளகு - 1 ஸ்பூன்இஞ்சி - 5துண்டுபூண்டு - 10பல் பெரியவெங்காயம் - 1 தக்காளி - 1 தேங்காய் - 1/4மூடிமுந்திரி - 10பால் - 1/2 கப்

onions,tomatoes,carrots,beans,peas,potatoes ,வெங்காயம், தக்காளி, கேரட்,  பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு

செய்முறை: பாத்திரத்தில் எண்ணெய்1ஸ்பூன் விட்டு, சோம்பு, சீரகம், மிளகு, பச்சைமிளகாய், மல்லி, இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். பிறகு அனைத்தையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இதை தனியாக வைத்துக் கொள்ளவும். தேங்காய்,முந்திரி, கசகசா,பால் ஆகியவற்றை தனியாக சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, பிரியாணி இலை, ஸ்டார், பட்டை, ஏலக்காய், லவங்கம் சேர்க்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். பிறகு அரைத்த வைத்த பொருட்களை சேர்க்கவும். கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்க்கவும். உப்பும் சேர்க்கவும்.

தண்ணீர் தேவையான அளவுக்கு சேர்த்து கொதிக்க விடவும். அரைத்த தேங்காய் முந்திரி பால், விழுது சேர்த்து கொதிக்க விடவும். கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். சுவையான வெள்ளை குருமா ரெடி.

Tags :
|
|
|