Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • குடும்பம் ஒரு கதம்பம் என வாழ்வோம்... உயர்வுகள் பெறுவோம்

குடும்பம் ஒரு கதம்பம் என வாழ்வோம்... உயர்வுகள் பெறுவோம்

By: Nagaraj Tue, 08 Nov 2022 6:33:14 PM

குடும்பம் ஒரு கதம்பம் என வாழ்வோம்... உயர்வுகள் பெறுவோம்

சென்னை: சமுதாயத்தின் ஒரு அங்கமாக விளங்குவது குடும்பம். குடும்பம் ஒரு கதம்பம் ஆக இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவார்கள்.


அந்த காலத்தில் கூட்டுக் குடும்ப நிலை போற்றப்பட்டது. ஆனால் இன்றைய நாகரீக காலமாகி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வேறுபாடுகள் காரணமாக கூட்டுக் குடும்ப நிலை சிதைவுற்று தனிக் குடும்பமாக மாறி வருகின்றன. கூட்டுக் குடும்பங்களில் சிக்கல்கள், பிரச்சினைகள் காரணமாக தனிக்குடும்பம் ஆவது உண்டு.

பெரியோர் சொல் கேளாமை, குடும்பவாழ்க்கை புரியாமை போன்ற காரணங்களால் அடிப்படையில் தனிக் குடும்பங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. கணவன்-மனைவி, பிள்ளை, கணவனைப் பெற்ற மாமன்-மாமியார், கணவனோடு உடன்பிறந்தவர்கள், இவர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பு, பாசம், தியாகம், விட்டுக்கொடுக்கும் தன்மை, ஆகிய நற்பண்புகள் நிறைந்த ஓர் இடமே குடும்பம் என்று சொல்வது மிகப் பொருத்தம் என்று கூறப்படுகிறது.

சமுதாயத்தின் அடிப்படையாய்க் குடும்பம் விளங்குகிறது. ஆணும், பெண்ணும் திருமணத்தால் இணைந்து கணவன்-மனைவியாக வாழ்வது குடும்ப வாழ்வின் தனிச் சிறப்பு.

society,joint family,life in,women,marriage ,சமுதாயம், கூட்டுக்குடும்பம், இல் வாழ்க்கை, பெண்கள், திருமணம்

குடும்பம் செவ்வனே அமைவதற்கு தலைவன்-தலைவியர் ஆன தந்தை-தாய்க்கு பல பொறுப்புகள் இருக்கின்றன. இரு மாடுகள் சேர்ந்து வண்டியை இழுப்பது போல் கணவன்-மனைவி இணைந்து இல்வாழ்க்கை தேரை இழுக்க வேண்டி உள்ளன.

இதனால் தாய் தந்தையரை மையமிட்டு ஒரு குடும்பத்தின் சிறப்பு அமைகிறது என்று கூறப்படுகிறது. இவற்றில் பெண்களுக்கு காலங்காலமாகவே சில பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆணாதிக்க நிலை, சங்க காலம் தொட்டே பெண்களை அடக்கி ஆள்வது, அவர்களுக்கு படிப்பு உரிமை தடுக்கப்படுவது இருந்து வந்தன. இன்றைய சமுதாயத்தில் கல்வியறிவு பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கி சம அந்தஸ்தை நல்கினாலும் இன்னும் சில மக்கள் அந்த உயர்வை தவறான முறையில் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இன்றைக்கும் சில பெண்கள் திருமணம் என்றாலே வெறுத்து ஒதுங்கும் நிலை காணப்படுகின்றது. சமூகம் என்ற கட்டமைப்பில் குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கி இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கட்டாய தேவையின் அடிப்படையில் வாழ்வதே நலமாகும். அப்படி வாழ்பவனை சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதனாக மதிக்கப்படுகின்றனர்.

Tags :
|