Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • வீட்டில் உள்ள பெரியவர்கள் காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவதை கவனியுங்கள்

வீட்டில் உள்ள பெரியவர்கள் காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவதை கவனியுங்கள்

By: Nagaraj Mon, 15 June 2020 10:08:27 PM

வீட்டில் உள்ள பெரியவர்கள் காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவதை கவனியுங்கள்

வீட்டில் வயதான பெற்றோர் அல்லது உறவினர் உங்கள் பாதுகாப்பில் இருக்கிறார்களா. அப்போது அவர்களை குழந்தைகள் போல் பார்த்துக் கொள்வது நம் கடமை ஆகும். இவர்கள் காலை உணவை நேரம் தள்ளி சாப்பிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

காலை உணவு மிகவும் முக்கியமானது. காலையில் சரியாக சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கலோரிகளை திறமையாக கரைக்கலாம். மேலும் காலை உணவை தவறாமல் உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய ஆற்றலைப் பெற முடியும்.

breakfast,adults,timely,caring ,காலை உணவு, பெரியவர்கள், சரியான நேரம், கவனித்தல்

அதிலும் உண்ணும் காலை உணவில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகமாகவும், கொழுப்புக்கள் குறைவாகவும் இருக்க வேண்டும். இப்படி கார் போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவை காலையில் எடுத்துக் கொள்ளும் போது, நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய ஆற்றலானது அதிக அளவில் மெதுவாக உடலுக்கு கிடைக்கும்.
ஆகவே காலையில் உணவை உட்கொள்ளும் போது அத்துடன் பழங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதிலும் காலையில் உண்ணும் உணவில் வைட்டமின் சி, டி , கால்சியம், இரும் புச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளதை அதிகம் சேர்க்க வேண்டும். மூளைக்கு தொடர்ச்சியாக குளுக்கோஸ் தேவைப்படும். ஆனால் எப் போது ஒருவர் காலை உணவைத் தவிர்க்கிறாரோ அப்போது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக பராமரிக்காமல் போகும். எனவே வீட்டில் உள்ள முதியவர்கள் காலை உணவை சரியாக எடுத்துக் கொள்கிறார்களா என்பதை கவனியுங்கள்.

Tags :
|
|