Advertisement

பெண்களுக்கு அதிக ஆபத்தை தரும் ஒருதலை காதல்

By: Karunakaran Tue, 01 Dec 2020 3:19:37 PM

பெண்களுக்கு அதிக ஆபத்தை தரும் ஒருதலை காதல்

மற்ற நாடுகளை விட இந்தியாவில் ஒருதலை காதலால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கத்தான் செய்கின்றன. ஒருதலை காதலுக்காக சிலர் படிப்பையும், உயிரையும் விட்டு விடுவது உச்சகட்ட அறியாமை. காதல் உண்மையானது என்றால், அதை நிரூபிக்க அமைதியாக காத்திருக்கவேண்டும். நியாயமான முறையில் போராட வேண்டும். அப்படியும் ஏற்காவிட்டால் விட்டுவிட வேண்டும். ஒரு பெண் தனது காதலை ஏற்றுக்கொள்ளாதபோது, அதை ஆண் அமைதியாக ஏற்றுக்கொண்டு ஒதுங்கிவிடவேண்டும். மாறாக அவள் தன்னை அலட்சியப்படுத்திவிட்டாள் என்று கருதும்போதுதான் அது வன்ம உணர்வை தூண்டுகிறது.

பெண்கள் எப்போதும் புதிதாக ஒருவர் தன்னிடம் பேசும்போதும், பழகும்போதும் அவரது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து நடந்துகொள்ளவேண்டும். நட்பாக மட்டுமே இருந்தால் ஆபத்தில்லை. வேறு மாதிரியான எண்ணங்கள் மனதில் இருப்பதாக தோன்றினால், விழிப்பாகி விடவேண்டும். பெண், ஆணிடம் பழகும்போது அவர் ஒருதலை காதலோடு தன்னை அணுகும் சூழ்நிலை உருவாகலாம் என்பதை நினைவில் வைத்திருங்கள். அதனால் தொடக்கத்தில் இருந்தே நெருங்காமலும், விலகாமலும் ‘நான் எல்லோரிடமும் இப்படித்தான் நட்போடு பழகுவேன்’ என்பதை சுட்டிக்காட்டிவிடுங்கள்.

one-sided love,women,greater risk,love ,ஒருதலைப்பட்சமான காதல், பெண்கள், அதிக ஆபத்து, அன்பு

ஆபத்து என்றால் உதவுங்கள். உதவிக்கு அவர்கள் நன்றி சொல்வதோடு அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளிவைத்துவிடுங்கள். காதல் பற்றியோ, கல்யாணம் பற்றியோ பேசக்கூடிய சூழ்நிலை ஏற்படும்போது அவைகளை பற்றி பேசாமலே தவிர்க்கவேண்டியதில்லை. பெண்கள் சுய நலத்திற்காக இளைஞர்களை ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. உங்கள் குடும்ப விஷயங்களிலும், அந்தரங்க விஷயங்களிலும் அவர்களை தலையிட அனுமதிக்கும்போது, நீங்கள் அவரை காதலிப்பதாக அவர் புரிந்துகொள்ளக்கூடும்.

பரிசுகளுக்கும், பண உதவிகளுக்கும், பொழுதுபோக்குகளுக்கும் ஆண்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டாம். ஒரு பெண் தன்னிடம் மனம் விட்டுபேசினாலே அது காதல்தான் என்று ஆண்களும் தப்பாக புரிந்துகொள்ளக்கூடாது. காதல் அன்பால் நிறைந்தது. அது ஒரு போதும் யாரையும் அழிக்காது. அதனால் ஒருதலை காதல் என்றாலும், காதல் தோல்வி என்றாலும் விருப்பம் இல்லாவிட்டால் விலகிச்சென்றுவிடவேண்டும்.


Tags :
|