Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • உங்கள் துணையிடம் கோபம் கொள்லாமல் இருக்க இதுதான் சிறந்த வழி!

உங்கள் துணையிடம் கோபம் கொள்லாமல் இருக்க இதுதான் சிறந்த வழி!

By: Monisha Fri, 17 July 2020 5:05:37 PM

உங்கள் துணையிடம் கோபம் கொள்லாமல் இருக்க இதுதான் சிறந்த வழி!

கணவன் - மனைவிக்குள் ஏதாவது ஒரு விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் தோன்றினால் நிதானமாக பேசி முடிவெடுக்கவேண்டும். ஒருவரின் கருத்தை மற்றொருவர் ஆமோதிக்க மனமின்றி சட்டென்று கோபம் கொண்டால் அது பிரச்சினையை பெரிதுபடுத்திவிடும். துணையின் கோபம் டென்ஷனை அதிகப்படுத்தி இருவருக்குள்ளும் கோபத்தை தூண்டிவிடும். அதனால் தேவையற்ற மன அழுத்தம் ஏற்பட்டு நிம்மதி குலைந்துபோய்விடும்.

ஒருவர் கோபப்படும்போது மற்றொருவர் அமைதி காப்பதுதான் சிறந்தது. அந்த சமயத்தில் என்னதான் கூச்சல்போட்டாலும் துணை கேட்கும் மனநிலையில் இருக்கமாட்டார். பதிலுக்கு அவரும் சத்தம் போடுவார். அந்த சமயத்தில் அமைதியாக இருந்துவிட்டால் சில நிமிடங்களில் அவரும் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவார்.

husband,wife,relationship,angry,calm ,கணவன்,மனைவி,உறவு,கோபம்,அமைதி

அப்போது பொறுமையாக விளக்கி புரியவைப்பதுதான் புத்திசாலித்தனம். அடிக்கடி கோபம் கொள்பவராக இருந்தாலோ, அடிக்கடி சத்தம் போட்டுக்கொண்டு இருந்தாலோ எதற்காக அப்படி நடந்துகொள்கிறார் என்பதை தெரிந்து கொண்டு அவரது சுபாவத்தை படிப்படியாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். கோபம் நிரந்தர குணம் அல்ல. அதனை கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டால் தான் விபரீதமாகி விடும். வாழ்க்கை முழுவதும் இந்த சிக்கலை சமாளிப்பது கடினமாகிவிடும்.

அமைதியாக இருக்கும் நேரத்தில் துணையிடம் பிரச்சினையை எடுத்து கூறி புரியவைக்க வேண்டும். இதனால் பாதிக்கப்படுவது இருவரும்தான் என்பதையும் புரிய வைக்கவேண்டும். துணையிடம் இருக்கும் குறைபாடுகளையும் விளக்கமாக எடுத்துக்கூற வேண்டும். கைவினைக்கலை பயிற்சிகள் மனதை அமைதியாக வைத்திருக்க செய்யும். சட்டென்று கோபம் வெளிப்படுவதற்கு இடம் கொடுக்காது. தையல் கலை, ஓவியம், நீச்சல் போன்றவற்றுக்கு நேரம் ஒதுக்கிவரலாம். அவையும் கோபத்தை கட்டுப்படுத்த துணை புரியும். கோபத்தை கைவிட்டால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம்.

Tags :
|
|