Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • ஊரடங்கால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள பெண்கள்

ஊரடங்கால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள பெண்கள்

By: Karunakaran Fri, 25 Dec 2020 12:07:56 PM

ஊரடங்கால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள பெண்கள்

பெரும்பாலும் பெண்களுக்கு வீடுதான் உலகமாக இருப்பதால் அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்பது ஆண்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது. ஆனால் ஊரடங்கால் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகி இருப்பது சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. நிறைய பெண்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. வீட்டு வேலைகளை ஆண்கள் ஓரளவு பகிர்ந்து கொள்ள தொடங்கி இருக்கிறார்கள் என்ற கருத்து நிலவினாலும் பெண்களுக்குத்தான் அதிக சுமை ஏற்பட்டிருக்கிறது.

வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மூன்று வேளையும் சமைப்பது, பாத்திரம் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது போன்ற வேலைகள் பெண்களுக்கு அதிகரித்து இருப்பதாக அந்த சர்வே சுட்டிக்காட்டியுள்ளது. கணவன் அலுவலகம் செல்லும்போது மதிய உணவுக்கான சமையல் காலையிலேயே முடிந்துவிடும் என்பதால் பெண்களுக்கு சிறிது நேரம் ஓய்வு கிடைக்கும் நிலை இருந்தது. இப்போது மதியம் சமைக்க வேண்டி இருப்பதோடு சாப்பிடுவதற்கு பரிமாறப்படும் பாத்திரங்களை கழுவுவதும் கூடுதல் வேலை பளுவை ஏற்படுத்தி இருக்கிறது.

women,extreme stress,curfew,man ,பெண்கள், தீவிர மன அழுத்தம், ஊரடங்கு உத்தரவு, மனிதன்

வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருப்பதால் அவர்களின் தேவைகளை கேட்டறிந்து செய்து கொடுப்பது, அடிக்கடி வீட்டை சுத்தம் செய்ய வேண்டியும் இருப்பது என பெண்களின் வேலை ஓய்வில்லாமல் தொடரும் நிலை நீடிக்கிறது. பெரும்பாலான வீடுகளில் காய்கறிகள், மளிகை பொருட்களை பெண்கள்தான் கடைக்கு சென்று வாங்க வேண்டி இருக்கிறது என்பதும் சர்வேயில் தெரியவந்துள்ளது.

டி.வி. பார்ப்பதிலும், செல்போனில் பொழுதை போக்குவதிலும்தான் நிறைய ஆண்கள் ஆர்வம் காட்டுவதாகவும், மனைவிக்கு உதவி செய்தாலும் கூட உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் பெண்களுக்குத்தான் அதிகமாக இருப்பதாக சர்வே குறிப்பிடுகிறது. வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளை கவனிக்கும் பெண் களுக்கு வேலைப்பளு இரு மடங்கு கூடி இருக்கிறது. ஆண்கள் செய்து கொடுக்கும் வேலைகள் அவர்களுக்கு நெருக்கடியை குறைப்பதாக இருக்க வேண்டும். எப்படியெல்லாம் வேலை சுமையை குறைக்கலாம் என்று தம்பதியர் இருவரும் திட்டமிட வேண்டும். பெண்களும் குடும்பத்தினரிடம் நிலைமையை புரிய வைக்க வேண்டும்.

Tags :
|
|