Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் வெளியீடு

உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் வெளியீடு

By: Karunakaran Tue, 04 Aug 2020 4:43:24 PM

உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் வெளியீடு

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து இந்தியாவில் எந்த விளையாட்டு போட்டியும் நடைபெறவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியை வெளிப்புற மைதானங்களில் தொடங்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டிகளை தொடங்குவது எப்போது? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் முடிவு செய்யவில்லை. இருப்பினும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்காக வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

domestic cricketers,training,procedures,indian cricket board ,உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள், பயிற்சி, நடைமுறைகள், இந்திய கிரிக்கெட் வாரியம்

இந்த வழிகாட்டுதல் நடைமுறையில், பயிற்சி முகாம் தொடங்குவதற்கு முன்பாக பயிற்சியில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ‘ஆன்-லைன்’ மூலம் ஒப்புதல் படிவத்தில் கையொப்பமிட வேண்டும். வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்களின் உடல் நலம், பாதுகாப்புக்கு அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி முகாம் தொடங்கும் முன்பு டாக்டர்கள் குழு சார்பில் ஆன்-லைன் மூலம் வீரர்களுக்கு மருத்துவ கருத்தரங்கு நடத்தி ஆலோசனைகள் வழங்க வேண்டும். பயிற்சி நடைபெறும் இடங்களில் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கக்கூடாது. பந்தை பளபளக்க வைக்க எச்சிலை பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்து இருப்பதால், பயிற்சியின் போது பந்தை எச்சிலை கொண்டு பளபளப்பாக்க அனுமதிக்கக்கூடாது என்று வழிகாட்டுதல் நடைமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :