Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • குறைந்த செலவில் ஒரு சுற்றுலாத்தலம்... கொடிவேரி அணைக்கட்டு!!!

குறைந்த செலவில் ஒரு சுற்றுலாத்தலம்... கொடிவேரி அணைக்கட்டு!!!

By: Nagaraj Mon, 15 June 2020 10:21:16 PM

குறைந்த செலவில் ஒரு சுற்றுலாத்தலம்... கொடிவேரி அணைக்கட்டு!!!

நம் தமிழகத்திற்குள்ளேயே ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன. அதிலும் குறைவான செலவில் குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழலாம். அந்த வகையில் இன்று கொடிவேரி அணைக்கட்டு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பவானிசாகர் அணையிலிருந்து வரும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைதான் கொடிவேரி அணைக்கட்டு. தன்னைதானே தூர் வாரிக்கொள்ளும் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 75 கி.மீ, ஈரோட்டில் இருந்து 70 கி.மீ தொலைவில் சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ளது.

low cost,tourist,family,coral temple,permit ,
குறைந்த செலவு, சுற்றுலா, குடும்பம், பவளமலை கோவில், அனுமதி

ஈரோடு மாவட்டத்தில் (பண்ணாரி மாரியம்மன் கோவில் இருந்து 20 கி.மீ.) உள்ள அற்புதமான சுற்றுலாத்தளங்களில் இதுவும் ஒன்று. இந்த அணையானது 25,000 ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு தண்ணீரை பாசனத்திற்காக வழங்குகிறது. கொடிவேரி அணைக்கட்டில் குளித்துவிட்டு சாப்பிட அங்கு பிடித்த மீனை உணவு சமைத்துத் தருகிறார்கள், அந்த மீனுக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. பல தமிழ் திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளன.

இதை சுற்றிலும் எமரால்டு விருந்தினர் விடுதி, பவள மலை கோவில் என சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளன. காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி உண்டு. மிகவும் குறைந்த செலவில் குடும்பத்தினருடன் சென்று பார்த்து குளித்து மகிழுங்கள்.

Tags :
|