Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • சென்னை மக்களே இதோ உங்களுக்கு ரிலாக்ஸ் ஆக சில இடங்கள்

சென்னை மக்களே இதோ உங்களுக்கு ரிலாக்ஸ் ஆக சில இடங்கள்

By: Nagaraj Sun, 18 Dec 2022 5:48:22 PM

சென்னை மக்களே இதோ உங்களுக்கு ரிலாக்ஸ் ஆக சில இடங்கள்

சென்னை: சென்னை மக்கள் வார கடைசியில் மனைவி, குழந்தைகளுடன் எங்கேயாவது வெளியில் செல்லலாம் என்றால் மால், பீச், காபி ஷாப் போல இடங்களுக்கு செல்வார்கள். இப்படி போன இடத்துக்கே போயி அலுத்து போச்சா? கவலைய விடுங்க. இதோ சில இடங்கள் உங்களுக்காக.
முதலை காப்பகம்: நீங்கள் விலங்குகள் மீது நாட்டம் கொண்டவர்கள் அல்லது குழந்தைகளுக்கு விலங்குகள் பற்றி கற்பிக்க விரும்பினால் சென்னையில் இருக்கும் இந்த முதலை காப்பகத்திற்கு செல்லலாம். இங்கு முதலைகள் மட்டும் அல்லாது அரிய வகை பாம்புகள், ஆமைகள், உடும்புகள் போன்ற பல விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கைலாசநாதர் கோவில்: எப்படி தஞ்சை பெரிய கோவில் உலகளவில் சிற்பங்களுக்காக பேர் போனதோ, அதே போல சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து 86 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த காஞ்சி கைலாசநாதர் கோவில் தனக்கென தனித்துவமான கற்சிற்பங்களுக்காக தனி சிறப்பு பெற்றது.

chennai,vandalur,crocodile farm,architecture,tourism ,சென்னை, வண்டலூர், முதலைப்பண்ணை, கட்டடக்கலை, சுற்றுலா

வண்டலூர் ஜூ: ஒரு வாரம் ஆனாலும் முழுசா சுத்திப் பாக்க முடியாது, அவ்ளோ பெரிய ஜூ இது. இங்க அனைத்து வகையான விலங்குகளையும் பார்க்க முடியும். உங்க பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில், அதிக செலவு இல்லாமல் நல்லா டைம் பாஸ் பண்ணலாம்.

தக்ஷிண சித்ரா: முட்டுக்காடு பகுதியில் இருக்கும் இந்த இடமானது பாரம்பரிய தென்னிந்தியர்களின் கட்டடக்கலை, கலாச்சாரம், இசை கருவி போன்ற பல விஷயங்களை கொண்டு உருவாக்கப்பட்டது. மனிதர்களை போலவே ஒவ்வொரு இடத்திலும் பொம்மைகளை வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Tags :