Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • ஹனிமூன் கொண்டாட்டம் சிறப்பாக அமைய இந்த இடங்களுக்கு செல்லாம்!

ஹனிமூன் கொண்டாட்டம் சிறப்பாக அமைய இந்த இடங்களுக்கு செல்லாம்!

By: Monisha Mon, 28 Dec 2020 4:46:20 PM

ஹனிமூன் கொண்டாட்டம் சிறப்பாக அமைய இந்த இடங்களுக்கு செல்லாம்!

திருமணம் என்பது மனித வாழ்வில் மிக முக்கியம் என்றாலும் திருமண கொண்டாட்டத்திற்குப் பிறகு நீங்கள் சோர்ந்து போயிருப்பீர்கள். எனவே திருமண கொண்டாட்டத்திற்கு பிறகு ஹனிமூன் பிரேக் அவசியம்தான். ஆனாலும் அதிலும் நீங்கள் திட்டமிட வேண்டியது முக்கியம். உங்கள் ஹனிமூன் எங்கே இருக்க வேண்டும் எப்படி உங்கள் பயணம் அமைய வேண்டும் மலைகள் சூழ்ந்த பகுதியை கடற்கரை பகுதியா வெளிநாட்டு பயணமா எல்லாவற்றையும் நீங்கள் முடிவு செய்ய வேண்டும். இந்த பதிவில் நம் இந்திய நாட்டில் ஹனிமூன் செல்ல சில ஆடம்பர இடங்களை பார்ப்போம்.

அந்தமான்
சிறு சிறு தீவுகள் ஒன்றிணைந்த ஒரு பெரும் தீவுதான் அந்தமான். இங்கு போர்ட்ப்ளாய்ர் தொடங்கி எங்கும் அற்புதமான நீலம் எங்கும் கடலென பரவி இருப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். இங்கே ஹனிமூன் தம்பதிகள் பார்க்க வேண்டிய தீவு ஹாவ்லக் தீவாகும். இங்கு சூரிய அஸ்தமனம் அற்புதமாக இருக்கும்.

honeymoon,andaman,srinagar,ladakh lake,coorg ,ஹனிமூன்,அந்தமான்,ஸ்ரீ நகர்,லடாக் ஏரி,கூர்க்

ஸ்ரீ நகர்
நினைத்தாலே குளுமை பரவும் இடம். இங்குள்ள கம்பளிகள் குங்குமப்பூ மரங்கள் வெளிர் நிறமான மலைகள் இந்த இடத்தை ஹனிமூன் செல்பவர்களுக்காக அமைக்கப்பட்டது போலவே இருக்கிறது. அங்குள்ள ஐந்து நட்சத்திர ஷெரட்டன் ஹோட்டலில் தங்கலாம் அல்லது தால் ஏரியில் படகு வீட்டில் தங்கலாம் அது உங்கள் ரசனையைப் பொறுத்தது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை இங்கு செல்லலாம்.

ஷில்லாங்
தெளிவான வானம் பசுமை பள்ளத்தாக்கு வானிலை 18ல் இருந்து 21 செல்சியஸ் ஏப்ரல் மாதங்களில் இந்த இடம் ரொமான்ஸ் பூமி, உங்கள் வாழ்க்கை துணையோடு ஒரு நீண்ட நடை பயணம் செல்லுங்கள்.

honeymoon,andaman,srinagar,ladakh lake,coorg ,ஹனிமூன்,அந்தமான்,ஸ்ரீ நகர்,லடாக் ஏரி,கூர்க்

லடாக் ஏரி
லடாக்கில் மே மாதம் நன்றாக இருக்கும். அந்த நேரத்தில் சூரியன் கதிர்கள் பனிமலைகளில் படும்போது அந்த அழகை காண கண்கோடி வேண்டும்.

கூர்க்
கர்நாடக மாநிலத்தில் இருக்கிறது கூர்க். இது இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படுகிறது. காபியின் வாசனை, அழகிய மலைத்தொடர் அதன் பசுமை இந்த இடம் ஹனிமூன் தம்பதிகளுக்கானது என்பதை உறுதி செய்யும்.

உதய்ப்பூர்
ஏரிகளின் நகரமான இந்த உதய்ப்பூர் அமைதியின் சிகரமாக இருக்கும். ஆடம்பரமான தங்குமிடங்களில் ஒரு ராஜவாழ்க்கையை உங்கள் தேனிலவில் வாழும் வாய்ப்பை நீங்கள் பெற முடியும்.

Tags :