Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • ஒகேனக்கல் அருவி மக்கள் சுற்றி பார்க்க மிக சிறந்த இடம்

ஒகேனக்கல் அருவி மக்கள் சுற்றி பார்க்க மிக சிறந்த இடம்

By: vaithegi Sat, 18 June 2022 9:21:04 PM

ஒகேனக்கல் அருவி மக்கள்  சுற்றி பார்க்க மிக சிறந்த இடம்

தமிழ்நாடு: ஒகேனக்கல் அருவி இந்தியாவின் மிக தலை சிறந்த அருவிகளில் ஓன்று. தமிழ்நாடு மாநிலத்தில் காவிரி ஆற்றில் இவருவி அமைந்துள்ளது. இந்த அருவியானது தருமபுரியில் இருந்து சுமார் 47 கிமீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 18 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்தியாவின் முக்கியமான நதிகளில் ஓன்றான காவிரி இங்கு பாய்கிறது. காவிரி ஆறானது கர்நாடகாவில் குடகு மலை பகுதியில் தோன்றி ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்கு வருகிறது.

இந்த அருவியானது மிக ரம்மியமான சூழலோடும், இயற்கை காட்சிகளோடும் அமைந்துள்ளது. ஒகேனக்கல் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது.

ஒகேனக்கல் என்றால் கன்னடத்தில் புகை சூழ்ந்த பாறைகள் என்று பொருள். ஓகே என்றால் ‘புகை’ கல் என்றால் ‘பாறை’. தண்ணீர் விழும் போது ஏற்படும் புகை பாறையிலிருந்து தோன்றுவது போன்று அமைப்பு இருப்பதால் இதற்கு ஒகேனக்கல் என்று பெயர் வந்தது. ஒகேனக்கல் அருவி ஒற்றை அருவி அல்ல அருவிகளின் தொகுப்பு. உள்ளம் கொள்ளை கொள்ளும் இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிவர பரிசல்களில் சவாரி செய்யலாம். இந்த அருவியின் நீர் மேட்டூர் அணையை நோக்கி பாய்கிறது.

இந்த நீர்வீழ்ச்சியில் பல இடங்களில் தண்ணீர் 20 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து சத்தத்தை ஏற்படுத்தி அப்பகுதியில் வித்தியாசமான சூழலை உருவாக்குகிறது. இந்த அருவியில் உல்லாசமாக குளிக்கலாம். இங்கு உடலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து விட ஆட்கள் இருக்கிறார்கள். மசாஜ் முடிந்தவுடன் அருவியில் குளித்தால் மிக புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

ஒகேனக்கல்லில் “ஆட்டுக்கல் மீன் குழம்பு” பிரபலமானது. மீன் வாங்கி கொடுத்துவிட்டு குளித்து விட்டு வரும்போது அங்கிருக்கும் பெண்கள் ஆட்டுக்கல்லில் மாசா அரைத்து மீன் குழம்பு வைத்து சுடசுட தருகின்றனர்.அது மிகவும் சுவையாக இருக்கும்.

cauvery,mountains,okanagan,falls ,காவிரி,மலைகள்,ஒகேனக்கல் ,நீர்வீழ்ச்சி

தலைநீர் என்பது இந்த நீர்வீழ்ச்சியை குறிக்கும் சங்ககால வழக்கு. இதனை சூழ்ந்திருந்த நாடு தலைநீர் எனப்பட்டது. தகடூர் என்னும் தருமபுரியை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி இதன் சங்ககால அரசன்.

ஒகேனக்கல்லின் பழைய பெயர் உகுநீர்க்கல். 1946 ம் ஆண்டு சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து புது இலக்கிய பதிப்பகம் வெளியிட்ட “குளிர் காவிரி” என்னும் கவிதை நூல் இவ்வருவியை 100 பாடல்களில் வருணிக்கிறது. இதன் 9ம் தலைப்பு உகுநீர்கல் உயிர்க்காவிரி என கொடுக்கப்பட்டுள்ளது. உகுநீர்க்கல் எனபதே ஒகேனக்கல் எனதிரிந்து விட்டது.

பசுமையான மலைகள், குளிர்ந்த அருவி, சிலுசிலுக்கும் காற்று, அருமையான மீன்குழம்பு இவையெல்லாம் வேண்டுமென்றால் ஒகேனக்கல்லுக்கு கிளம்புங்கள். முக்கிய ஊர்களிலிருந்து ஒகேனக்கல்லுக்கு உள்ள தூரம் தெரிந்து கொள்ளுங்கள்.

சென்னையிலிருந்து ஒகேனக்கல்லுக்கு – 345 கிமீ தொலைவும், பெங்களூரிலிருந்து – 146 கிமீ, சேலத்திலிருந்து – 85 கிமீ, கோவையிலிருந்து – 217 கிமீ தொலைவும் உள்ளது.

Tags :