Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • வரும் 21ம் தேதி ஆன்மீக சுற்றுலா பயணத்திற்கு ராமாயண யாத்ரா ரயில் ரெடி

வரும் 21ம் தேதி ஆன்மீக சுற்றுலா பயணத்திற்கு ராமாயண யாத்ரா ரயில் ரெடி

By: Nagaraj Mon, 13 June 2022 11:45:48 PM

வரும் 21ம் தேதி ஆன்மீக சுற்றுலா பயணத்திற்கு ராமாயண யாத்ரா ரயில் ரெடி

புதுடெல்லி: பக்தி சுற்றுலா பயணம்... இந்திய இரயில்வே சுற்றுலா மற்றும் கேட்டரிங் கார்ப்பரேஷன் வழங்கும் ஸ்ரீ ராமாயண யாத்ரா ரயில், சர்வதேச யோகா தினமான வரும் 21ம் தேதியன்று இந்தியா - நேபாளம் இடையே முதன்முறையாக ராமாயண பக்தி சுற்றுலா பயணம் தொடங்குகிறது.

ஐஆர்சிடிசியின் ஸ்ரீ ராமாயண் யாத்ரா ரயிலுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கிய இடங்களுக்கு செல்வதற்காக, ஸ்ரீ ராமாயண யாத்ரா ரயிலை IRCTC தொடங்கியுள்ளது.

இந்த ரயில், இந்தியா - நேபாளம் வழியே 18 நாட்களுக்கு எட்டு மாநிலங்களில் 8,000 கி.மீ., துாரத்திற்கு செல்லும். இந்த பக்தி சுற்றுலாவில் முதல் முறையாக நேபாளத்தில், ஜனக்பூரில் அமைந்துள்ள அன்னை சீதாபிராட்டி கோவிலுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

fare,guide,train,deposit,accommodation,food ,கட்டணம், வழிகாட்டி, ரயில், பத்ராச்சலம், தங்குமிடம், உணவு

நேபாளத்தின் ஜனக்பூர், பீஹாரின் சீதாமார்ஹி, காசி, பிரயாகை, ம.பி.,யின் சித்ரகூடம் ஆகிய இடங்களுக்கு இந்த ரயில் செல்லும். மேலும் மஹாராஷ்டிராவின் நாசிக், கர்நாடகாவின் ஹம்பி, தமிழகத்தின் ராமேஸ்வரம், காஞ்சிபுரம், தெலுங்கானாவின் பத்ராச்சலம் ஆகிய தலங்களுக்கும் பக்தர்களை இந்த ரயில் அழைத்துச் செல்லும்.

இதற்கு ஒருவருக்கு கட்டணம் 65 ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், உணவு, தங்குமிடம், சுற்றுலா வழிகாட்டி, காப்பீடு உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அடங்கும்.

Tags :
|
|
|