Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • காதல் துணையோடு வெளிநாட்டில் ஹனிமூன் செல்ல விரும்புகிறீர்களா?

காதல் துணையோடு வெளிநாட்டில் ஹனிமூன் செல்ல விரும்புகிறீர்களா?

By: Monisha Tue, 29 Dec 2020 4:56:13 PM

காதல் துணையோடு வெளிநாட்டில் ஹனிமூன் செல்ல விரும்புகிறீர்களா?

திருமணமான ஒவ்வொரு இளம் ஜோடிகளும் விரும்பும் ஒரு அற்புதமான சுற்றுலா ஹனிமூன் ஆகும். உங்கள் காதல் துணையோடு வெளிநாட்டில் ஹனிமூன் செல்ல விரும்புகிறீர்களா? இந்த பதிவில் உங்கள் பட்ஜெட்டில் செல்ல சிறந்த ஹனிமூன் இடங்களை பற்றி பார்ப்போம்.

மொரிஷியஸ்: தீவுகளில் நீல நிற நீருக்கு நடுவே வாழப் பிடித்தமானவர் இந்த இடத்தை தேர்ந்தெடுக்கலாம். 25 டிகிரி தட்பவெப்பம் இருக்கும். இங்கு செல்ல ஜூன் ஜுலை ஆகஸ்ட் இங்கு செல்ல சரியான நேரம்.

க்ரோட்டியா: இங்கு செல்ல சரியான மாதம் செப்டம்பர். அப்போது அதிக கூட்டம் இருக்காது. ஆப் சீசன் விலையில் ஹோட்டல்களில் தங்கலாம். இதன் தட்பவெப்பம் எப்போதும் நன்றாக இருக்கும். கொஞ்சம் குளிருக்குத் தேவையான உடைகளை எடுத்துக் கொள்ள மறக்காதீர்கள்.

abroad,honeymoon,mauritius,travel,hotel ,வெளிநாடு,ஹனிமூன்,மொரிஷியஸ்,சுற்றுலா,ஹோட்டல்

பாலி: இந்தியர்களுக்கு பிரபலமான இடம் பாலி. இங்குள்ள கலாச்சாரம் இயற்கை பாரம்பர்யம் அத்தனையும் உங்களுக்கு பிடிக்கும். இங்குள்ள பிரத்யேக கடற்கரைகள் உங்களை கொள்ளை கொள்ளும்.

ஸ்ரீலங்கா: புது வருடத்திற்கு செல்ல வேண்டிய இடம் ஸ்ரீலங்காத்தான். இங்குள்ள வானிலை அற்புதமாக இருக்கும். எப்போதும் விழாக்காலம் இருக்கும்.

பூடான்: நம் பக்கத்து நாடு. இங்குள்ள மலைகள் இமயமலைக்கு போட்டியானவை. இங்கு எளிமை மற்றும் வாழ்தலின் கொண்டாட்டதை நாம் அறிந்து கொள்ளலாம். சாகசங்களில் விருப்பம் உள்ளவர்கள் இந்த இடத்தை தங்கள் ஹனிமூனுக்கு தேர்ந்தெடுக்கலாம்.

abroad,honeymoon,mauritius,travel,hotel ,வெளிநாடு,ஹனிமூன்,மொரிஷியஸ்,சுற்றுலா,ஹோட்டல்

வியட்நாம்: பழையதை பத்திரப்படுத்தி இருக்கும் இந்த நாடு ஹனிமூன் தம்பதிகளுக்கு பொருத்தமானது. கப்பல் பயணங்கள் போட்டிக் ஹோட்டல்கள் இங்கு உள்ளன. மணல் நிறைந்த கடல் அல்லது மலைகள் இங்கு பிரசித்தம். எல்லாவற்றையும் நீங்கள் அனுபவிக்கலாம்.

நேபால்: உலகின் பாரம்பரியமான இடம் என இந்த நாட்டை யுனெஸ்கோ தேர்ந்தேடுத்திருக்கிறது, இங்கே உங்கள் காதல் இதன் அழகில் ஆரம்பிக்கட்டும். ஐரோப்பிய வகை உணவுகள் உணவு விடுதிகள் இங்கு பிரபலம். கண்டிப்பாக உங்களை சந்தோஷப்படுத்தும்.

எகிப்து: இங்கு அக்டோபர் மாதம் செல்ல வேண்டும் இல்லாவிட்டால் வெய்யிலில் நீங்கள் கருகி விடுவீர்கள். இங்குள்ள கலாச்சார அதிசயங்களை ஹனிமூனில் உங்கள் வாழ்க்கை துணையோடு பாருங்கள்.

Tags :
|
|