அமர்நாத் யாத்திரை நமது பாரம்பரியத்தின் அற்புதமான வெளிப்பாடு

புதுடில்லி: அமர்நாத் யாத்திரை நமது பாரம்பரியத்தின் தெய்வீக, அற்புதமான வெளிப்பாடு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இமயமலையில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு இன்று காலை முதல் யாத்ரீகர்கள் பால்டலில் உள்ள முகாமில் இருந்து யாத்திரைக்கு புறப்பட்டனர்.

வருடாந்திர அமர்நாத் யாத்திரை இன்று முதல் தொடங்கிய நிலையில், இந்த யாத்திரை நமது பாரம்பரியத்தின் தெய்வீக மற்றும் அற்புதமான வெளிப்பாடு என்று பிரதமர் நரேந்திர மோடி வர்ணித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீ அமர்நாத் யாத்திரையின் பயணம் நமது பாரம்பரியத்தின் தெய்வீக மற்றும் மகத்தான வடிவம். பாபா பர்பானியின் ஆசீர்வாதத்துடன், அனைத்து பக்தர்களின் வாழ்விலும் புதிய உற்சாகமும் புதிய ஆற்றலும் புகுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதே போல் நம் நாடு அமிர்தக்கலில் தீர்மானத்திலிருந்து சாதனையை நோக்கி வேகமாக நகர வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்