பழனி கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை

பழனி : தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் செல்போன் மற்றும் கேமராக்கள் கொண்டு செல்ல தடை விதிப்பு .. தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோவிளுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

இதற்கு முன்னதாக கருவறையில் செல்போன் பயன்படுத்தியது பற்றிய சர்ச்சை ஒன்று எழுந்தது. அதனால் பழனி மலை கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதி கேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து அதில் கோவிலுக்குள் செல்போன் போன்ற கருவிகளை எடுத்துச் செல்ல நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிடப்பட்ட நிலையில் ஏன் அதை அமல்படுத்தக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கருவறைக்குள் புகைப்படம் எடுக்க அனுமதித்ததற்காக கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளை இடைநீக்கம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கையில் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திருப்பதியை போன்று பழனியில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் அது மட்டுமில்லாமல் கோவில் நிர்வாகம் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடுக்க 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கும் வழிகளை நிரந்தர கட்டமைப்பை ஏற்படுத்த இருப்பதாக தெரிவித்து உள்ளார்.