சதுரகிரி பக்தர்கள் செல்ல இன்று முதல் அனுமதி

சதுரகிரி : ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் 3500 அடி உயரத்தில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்து உள்ளது. இதனை அடுத்து இங்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி ,பிரதோஷம் நாட்களில் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

ஆடி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டுக்காக நேற்று முதல் வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்யலாம் என வனத்துறை கூறியுள்ளது.

ஆனால் இதற்கு இடையே நேற்று முன்தினம் சாத்தூர் வனசரகம் 5-வது பீட்டில் சதுரகிரி மலையை ஓட்டியுள்ள ஊஞ்சல்வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. இதன் காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி மலை ஏற தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை காட்டுத்தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட நிலையில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

இதற்கு .முன்னதாக கடந்த ஜூலை 15-ஆம் தேதி சதுரகிரி மலையில் காட்டுத்தீ பரவியதால் பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.