தரிசன டிக்கெட்டுகள் இன்று திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியீடு

திருப்பதி: இன்று இணையதளத்தில் வெளியீடு .... திருப்பதியில் ஜனவரி 12-ந்தேதி முதல் 31-ந்தேதி வரைக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

எனவே இந்த டிக்கெட்டுகளை பக்தர்கள் www.tiruptibalaji.ap.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து திருப்பதியில் நேற்று 62, 856 பேர் தரிசனம் செய்தனர். 22,115 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

இதனை அடுத்து ரூ 2.21 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தேவஸ்தானம் சார்பில் பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு 6 ஆயிரம் அறைகள் வாடகைக்கு விடப்பட்டு வந்தது.

சேதம் அடைந்த அறைகள் ரூ.110 கோடி செலவில் தேவஸ்தானம் சார்பில் சீரமைக்கப்பட்டன. மேலும் பக்தர்கள் தங்கும் காட்டேஜ் கெஸ்ட் ஹவுஸ்களில் ஏ.சி, வெந்நீர், மற்றும் நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து இந்நிலையில் தங்கும் அறை வாடகை 3 முதல் 4 மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோன்று அறை கட்டணத்தை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.