திருப்பதி .... இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரத்திற்குள் சாமி தரிசனம்


திருப்பதி: 1 மணி நேரத்திற்குள் சாமி தரிசனம் ..... ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவிற்கு பிறகு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் உயர்ந்து காணப்பட்டது. பக்தர்கள் தரிசனத்திற்காக 48 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அவதி அடைந்தனர்.

இதனை அடுத்து ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் பெற்றவர்கள் 5 மணி நேரத்தில் சாமியை தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் முறை கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து அலிப்பிரி பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள கோதண்டராமசாமி சத்திரம் ஆகிய 3 இடங்களில் டைம்ஸ் லாக் டோக்கன் வழங்கி கொண்டு வருகின்றனர்.

டைம் ஸ்லாட் டோக்கன் வழங்குவதை அறியாத பக்தர்கள் நேராக திருமலைக்கு வந்து பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்கின்றனர். டோக்கன் வாங்காமல் நேரடியாக செல்லும் பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து கொண்டு வருகின்றனர்.