சபரிமலை ... இவர்களுக்கு தனிவரிசை


சபரிமலை : முதியவர்கள் மற்றும் குழந்தைகள் சுவாமி தரிசனம் செய்ய தனிவரிசை ... கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை, ஓணம், பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா, ஒவ்வொரு தமிழ் மாதம் பிறக்கும் முதல் 5 நாட்கள் ஆகிய முக்கிய நாட்களில் மட்டுமே திறக்கப்படுவது வழக்கமாகும். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.

அதிலும் குறிப்பாக நேற்று முன்தினம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்தனர். அதனால் பக்தர்களின் கூட்டத்திற்கு தகுந்தவாறு தரிசன நேரத்தை தற்போது தேவஸ்தானம் அதிகரித்துள்ளது. அதன்படி அதிகாலை 3 மணிக்கு கோவிலின் நடை திறக்கப்பட்டும், மதியம் 3.30 மணிக்கு சாத்தப்படுகிறது. அதன்பின்பு மாலை 3 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு இரவு 11:30 மணி வரை நடை திறக்கப்படுகிறது.

இதனால் பக்தர்கள் ஒரு நாளுக்கு 19 மணிநேரம் வரை சுவாமி தரிசனம் செய்யலாம். இதையடுத்து தற்போது பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி தேவஸ்தானம் போர்டு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

இதனை அடுத்து தினமும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவதால் பக்தர்க்ள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனை தவிர்ப்பதற்காக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் சுவாமி தரிசனம் செய்ய தனிவரிசை ஏற்பாடு செய்யப்ப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.