கிருஷ்ண ஜெயந்தி பற்றி சில தகவல்கள் உங்களுக்காக!!!

கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, க்ரிஷ்ணாஷ்டமி, அஷ்டமி ரோகினி என்று பல பெயர்களில் அழைக்கப்படும் கிருஷ்ணர் பிறந்த நாள் விழா பற்றிய சில தகவல்கள் உங்களுக்காக.

கம்சனை அழித்த கண்ணனை போற்றும் விதமாக அவன் பிறந்த நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகின்றது இந்த நாளை கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, க்ரிஷ்ணாஷ்டமி, அஷ்டமி ரோகினி என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். அதாவது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக.

இந்த திருநாளில், மக்கள் ஒரு வேளை உணவோடு விரதம் இருந்து, அஷ்டமி திதி அன்று கொண்டாடுவார்கள். புளியோதரை, எலுமிச்சை சாதம், என்று பல வகை சாத வகைகள், முறுக்கு, அதிரசம், சீடை, லட்டு என்று பல வகை பலகாரங்கள், வெண்ணை என்று அவரவர் வசதிக்கு ஏற்ப படைத்து கண்ணனை வணங்குவார்கள்.

ஹரே கிருஷ்ண (janmashtami) ஹரே ராம என்ற பஜனைகள் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கும். நேபாள், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஜெர்மனி, லண்டன் போன்ற வெளிநாடுகளிலும், கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக மக்களால் கொண்டாடப்படுகின்றது

ஒரு நாள் முதல் மூன்று நாட்கள் வரையிலும் இந்த பண்டிகை பல நிகழ்ச்சிகளோடு கொண்டாடப்படுகின்றது பங்களாதேசத்தில் இந்த பண்டிகைக்கு 1902 முதல் அரசு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.