வெகு நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலை சரிவு

சென்னை: தமிழகத்தில் புத்தாண்டுக்கு பிறகு தங்கம் விலையானது கிடுகிடுவென அதிகரித்தது . புத்தாண்டு நன்னாளில் தங்க ஆபரணங்கள் வாங்கி கொள்ளலாம் என எதிர்பார்த்து வந்தவர்கள் விலை உயர்வால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து நாள்தோறும் உயரும் தங்கத்தின் மீதான முதலீடு, இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.136 க்கு அதிகரித்து ரூ. 41,664க்கு விற்பனை செய்யப்பட்டது.

இவ்வாறு தொடர்ந்து தங்கத்தின் விலையானது அதிகரித்து வந்த வேளையில் இன்று சற்று மகிழ்ச்சி அளிக்கும் விதமாக சென்னையில் இன்றைய காலை நேர நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது.

இதனையடுத்து ஒரு சவரன் ரூ. 41, 520 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.38 குறைந்து ரூ.5,190க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் இன்று ரூ.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.73.50 க்கு, விற்பனையாகி வருகிறது.