சமையல் எண்ணெயின் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம்

இந்தியா: உலகம் முழுவதும் தற்போது பொருளாதார பண வீக்கம் வணிக நிறுவனங்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் சமையல் எண்ணெயின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடியான மாற்றம் கவனிக்கத்தக்க வகையில் இருந்து கொண்டு வருகிறது. கடுகு, சோயாபீன், பருத்தி மற்றும் நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துக்களின் வரத்து குறைந்து கொண்டு வருகிறது.

இதனால் கடுகு, நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி ஆகியவை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எண்ணெய் இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெயின் விலையை விட 1 கிலோவுக்கு 2 முதல் 3 ரூபாய் குறைவாக விற்பனை செய்கின்றனர்.


அதிலும் குறிப்பாக 60 % முதல் 70% வரையிலான சிறு எண்ணெய் அரைக்கும் ஆலைகள் நடப்பாண்டில் மூடப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு 2.7 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விதைக்கப்பட்ட நிலக்கடலை நடைபாண்டில் 1.80 லட்சம் ஹெக்டேர் ஆகவும், 41,000 ஹெக்டேரியிலிருந்த சூரிய காந்தி விதைப்பு 37,000 ஆக குறைந்து உள்ளது.

எனவே இதன் காரணமாக சமையல் எண்ணைய்க்கான தேவை 10% அதிகரித்து உள்ளது. இறக்குமதியாளர்கள் நிதி இழப்பை சந்தித்து வரும் நிலையிலும், விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கத்தில் விலை குறைப்பு நடவடிக்கையை எடுத்து உள்ளதாக