வெகு நாட்களுக்கு பிறகு இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சரிவு

சென்னை: தமிழகத்தில் கடந்த வாரத்திலிருந்து ஆபரணத்தங்கத்தின் விலை அதிர்ச்சி அளிக்கும் அளவிற்கு உயர்ந்து கொண்டே. வருகிறது. தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ. 500க்கும் மேல் உயர்ந்தது. பிறகு 600 என தொடர்ந்து 4 நாட்களில் சவரன் ரூ.1,880 வரை விலை உயர்ந்தது.

இதையடுத்து இந்த விலை உயர்வு தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்களுக்கு உகந்த நேரமாக இருந்து கொண்டு வருகிறது.மறுபுறம் புதிய தங்க நகைகள் வாங்க முயற்சிப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான சிக்கலை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

நேற்றைய காலை நேர நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 440 உயர்ந்தது. இந்த விலை உயர்வால் திருமணம் மற்றும் பிற சுப நிகழ்வுகளுக்கு நகைகள் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நேரத்தில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் இன்று (மார்ச் 15) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.43,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் 1 கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.5,380க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை குறைந்துள்ள இந்த நேரத்தில் வெள்ளியின் விலை 50 காசு உயர்ந்து ரூ.72.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.