ரிலையன்ஸ் நிறுவன பங்குகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்தும் அமேசான் நிறுவனம்

பேச்சுவார்த்தை நடக்கிறது... முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில், அமேசான் நிறுவனம் 9.9 சதவிகித பங்குளை வாங்குவதற்காக பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது ஆன்லைன் மளிகை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ரிலையன்சின் ஜியோமார்ட், கூடுதலாக டெலிவரி கட்டணம் எதையும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிப்பதில்லை.

இந்த வசதியை பயன்படுத்தி, அமேசான் பிரெஷ் மற்றும் அமேசான் பேன்ட்ரி பொருட்களுக்கான ஆர்டரை அதே நாளில் டெலிவரி செய்ய அமேசான் முடிவு செய்து இந்த பங்கு மூலதன ஒப்பந்தத்தை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமேசானின் இந்த முடிவு குறித்த தகவல் வெளியானதை தொட்ந்து ரிலையன்சின் பங்குகள் 3.59 சதவிகிதம் உயர்ந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.