காய்கறிகளின் விலை நிலவரம்

சென்னை: தமிழகத்தை பொறுத்தவரையில் காய்கறிகளின் வரத்தை பொருத்து தான் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து மழைக்காலங்களில் காய்கறிகளில் உற்பத்தி பாதிப்பு மற்றும் போக்குவரத்து இடையூறு காரணமாக ஒரு சில காய்கறிகளின் விலை ஆனது வழக்கத்தை விட தற்போது அதிகரித்து உள்ளது. நவம்பர் 27ஆம் தேதி ஆன இன்று காய்கறிகளின் விலை நிலவரம் 1 கிலோ என்று அளவில் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.


அந்த வகையில் அவரைக்காய் ரூபாய் 70,பீன்ஸ் ரூபாய் 70, பீட்ரூட் ரூபாய் 35, பாகற்காய் ரூபாய் 40, கத்தரிக்காய் ரூபாய் 30, பட்டர் பீன்ஸ் ரூபாய் 64, முட்டைகோஸ் ரூபாய் 10, கேரட் ரூபாய் 35, முருங்கைக்காய் ரூபாய் 70, பூண்டு ரூபாய் 150,

இதனை அடுத்து இஞ்சி ரூபாய் 240, வெண்டைக்காய் ரூபாய் 30, வெங்காயம் ரூபாய் 55, சின்ன வெங்காயம் ரூபாய் 95, தக்காளி ரூபாய் 40 ,சேனைக்கிழங்கு ரூபாய் 40 இவ்வாறு காய்கறிகள் ஆனது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.