அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தி உள்ளது

குஜராத்: இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னரே ஆரம்பிக்க பட்ட உணவு பொருள் உற்பத்தி நிறுவனம் அமுல் ஆகும். இத்திட்டம் சர்தார் வல்லபாய் படேல் குஜராத் மாநிலத்தில் கெய்ரா மாவட்டத்தில் இருக்கும் சமர்கா என்ற இடத்தில் நடைபெற்ற விவசாயிகளின் கூட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு என்று ஒரு கூட்டுறவு அமைப்பு ஒன்றை ஆரம்பித்தனர். இது நாளடைவில் அமுல் என்ற பெயருடன் பிரபலமாகியது. மேலும் முதலில் பால் மட்டும் வைத்து இருந்த நிறுவனம் அதன் பின் நெய், வெண்ணை, ஐஸ் கிரீம் போன்றவற்றை அறிமுகப்படுத்தியது.

இப்படியான காலகட்டத்தில் பால் சார்ந்த உணவு பொருட்களுக்கு பெயர் பெற்ற அமுல், ஐஸ்கிரீம் பிரிவிலும் சாதனை படைத்து கொண்டு வருகிறது. இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் பிராண்டாக வளர்ச்சியடைந்தது. அன்றிலிருந்து இன்று வரை அமுல் நிறுவனத்தை யாராலும் அசைக்க முடியவில்லை.

இந்த நிலையில் அமுல் நிறுவனம் மிக முக்கிய தயாரிப்பான பால் விலையை சற்று உயர்த்தி உள்ளது. இதனை அடுத்து விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்து, அதை பல்வேறு பால் பொருளாகத் தயாரித்து உள்நாடுகளில் விற்பனை செய்வதோடு அவற்றை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது

மேலும் அமுல் நிறுவனம் குஜராத்தை தலைமியிடமாக கொண்டு செயல் படும் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான அமுல் பால் ,பால் பொருட்களின் விலையை அதிகரித்தியுள்ளதுஎனவே இதனை தொடர்ந்து பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியதுடன் பால் பொருட்களின் விலையையும் அதிகரித்தியுள்ளது.