பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் காய்கறிகளின் விலை ஆனது இன்று உச்சம்

சென்னை: பருவமழை காலங்களில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பயிர்சேதம் போன்ற காரணங்களினால் காய்கறிகளின் விலையானது உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதையடுத்து ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் காய்கறிகளின் விலை உயர்வை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடப்பு ஆண்டில் பருவமழை காலம் தொடங்கியது முதல் காய்கறிகளின் விலை வழக்கத்தை விட சற்று உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் வருகிற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரவுள்ளது. தீபாவளி பண்டிகை எதிரொலி காரணமாகவும் காய்கறிகளின் விலை ஆனது வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

எனவே அதன்படி தமிழகத்தில் காய்கறிகளின் விலை நிலவரம் பற்றிய பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் 1 கிலோ என்ற அளவில் விலை குறிப்பிடப்பட்டு உள்ளது. அவரைக்காய் ரூபாய் 40, பீன்ஸ் ரூபாய் 50, பீட்ரூட் ரூபாய் 40, கத்தரி ரூபாய் 15, பட்டர் பீன்ஸ் ரூபாய் 64, முட்டைக்கோஸ் ரூபாய் 15, கேரட் ரூபாய் 28,

மேலும் முருங்கைகாய் ரூபாய் 50, பெரிய மலைப்பூண்டு ரூபாய் 150, சிறிய பூண்டு ரூபாய் 169, இஞ்சி ₹240, பச்சை மிளகாய் ரூபாய் 30, வெங்காயம் ரூபாய் 54, சின்ன வெங்காயம் ரூபாய் 90, உருளைக்கிழங்கு ரூபாய் 48, தக்காளி ரூபாய் 40 என்ற விலை நிலவரங்கள் தற்போது நிலவி வருகிறது.