அரசின் நடவடிக்கையால் பெரிய வெங்காயம் கிலோ ரூ.25 க்கு விற்பனை

சென்னை: தமிழகத்தில் நவம்பர் மாத தொடக்கத்தில் பெய்த பருவமழை காரணமாக காய்கறிகளின் விலை சற்று உயர்ந்தது. அதிலும் குறிப்பாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது வழக்கமாக குறைந்த விலைக்கு விற்கப்படும் பெரிய வெங்காயத்தின் விலை வரத்து குறைவால் கிலோ ரூ.70- வரை விற்பனையானது. இதனால் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசின் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் வாயிலாக தற்போது தமிழகத்தில் 1 கிலோ பெரிய வெங்காயம் ரூ. 25 விற்பனையாகிறது.


போக்குவரத்து செலவு ஆகியவற்றை சேர்த்து தமிழகத்தில் அமைந்து உள்ள கூட்டுறவு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.30 க்கு வெளிச்சந்தையில் 1 கிலோ 60-க்கும் விற்பனையாகி வருகிறது.

இதையடுத்து தற்போது கூட்டுறவு பசுமை பண்ணை கடைகளில் வெங்காயத்தின் விலை குறைந்து விற்கப்படுவதால் மக்கள் அதிக அளவில் வெங்காயம் வாங்க ஆர்வம் காட்டி கொண்டு வருகின்றனர்.