தங்கத்தின் விலை இன்றைய நிலை என்ன

சென்னை: ஆபரணத் தங்கம், என்பது அணிகலனாக மட்டுமில்லாமல் சிறந்த முதலீடாகவும் உள்ளது. கொரோனா கால ஊரடங்கு நேரத்தில் அனைத்து வகையான முதலீடுகளும் சரிவை சந்தித்தது. இதனால், முதலீட்டாளர்கள் கடும் பொருளாதார சிக்கலை அடைந்தனர்.

ஆனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் மட்டும் எவ்வித இறக்கமும் இல்லாமல் எப்போதும் போல் வழக்கமான நிலையில் இருந்து வந்தது.இதனால், தங்கத்தின் மீதான முதலீடுகள் உயர தொடங்கியதால், அதற்கான தேவையும் அதிமாகியது. எனவே, தங்கத்தின் விலை இத்தனை வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

எனினும், கடந்த டிசம்பர் மாதம் முதல் மிகவும் அதிக அளவிலான விலை ஏற்றத்தை தங்கம் கண்டு வருகிறது. ஆனால், நேற்றும் இன்றும் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதாவது, 22 கேரட் தங்கம் 1 கிராம் ரூ. 7 குறைந்து ரூ. 5230 ஆகவும், 1 சவரன் ரூ. 41840 ஆக இன்று விற்பனை ஆகி வருகிறது.

அதேபோல், 24 கேரட் தங்கமும் கிராமிற்கு ரூ. 5705 ஆகவும், 1 சவரன் ரூ. 45640 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை 1 கிராமிற்கு ரூ.30 காசுகள் அதிகரித்து 1 கிராம் ரூ.74 ஆகவும், 1 கிலோ ரூ. 74000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.