தொடர் பண்டிகை பூஜை பொருட்கள் மற்றும் பழங்களின் விலை உயர்வு

சென்னை: விலை கடும் உயர்வு ... நவராத்திரி பண்டிகையின் 9-வது நாள் ஆயுதபூஜை மற்றும் 10வது நாள் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று தமிழகம் முழுவதும் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் ஆயுதபூஜை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் பூ, பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டி கொண்டு வருகிறது.

அதிலும், இன்று மாலை 4 மணிக்கு மேல் இன்னும் கூட்டம் அலைமோதும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஆயுதபூஜை பண்டிகையை தொடர்ந்து பூ மற்றும் பழங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் ஆப்பிள் கிலோவுக்கு ரூ.200 வரையிலும், மாதுளை, ஆரஞ்ச் ரூ.200 வரையும், சாத்துக்குடி ரூ.150 வரையும், கொய்யா, திராட்சை ரூ.100 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போன்று பூஜை பொருட்களான மஞ்சள் வாழை 1 தார் ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.800 வரையிலும், தேங்காய் ரூ.30க்கும், பொரி ஒரு படி ரூ.20க்கும், உடைத்த கடலை கிலோ ரூ.100க்கும், அவல் கிலோ ரூ.120க்கும், மாவிலை தோரணம் 2 ரூ.20க்கும், தென்னை மட்டை தோரணம் 2 ரூ.30 வரையிலும், கரும்பு கட்டு ரூ.500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.