வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று குறைந்தது

சென்னை:சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ஆகியவை போன்றவற்றின் விலையில் மாற்றம் ஏற்படும்.

இதனை அடுத்து அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 157.50 குறைந்தது. எனவே இதன் மூலம் ரூ.1,852.50-யிலிருந்து ரூ.1,695க்கு விற்பனையாகியது.இச்சூழலில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ 101.50 அதிகரித்தது.


அதன்படி வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 101.50 அதிகரித்தது. இதையடுத்து விலை உயர்வுக்கு பின், 1 சிலிண்டர் ரூ.1999.50க்கு விற்பனையாகியது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதியன்று ஏற்கனவே ரூ.203 உயர்த்திய நிலையில், மீண்டும் ரூ.101.50 அதிகரித்தது.

இந்த நிலையில் சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று சிலிண்டருக்கு 57 ரூபாய் குறைந்துள்ளது. இதன் மூலம் 1942 ரூபாய்க்கு வணிக கேஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அதே சமயம் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை எந்த வித மாற்றமும் இல்லாமல் 918 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.