கொரோனா எதிரொலி, வீட்டில் இருந்தே வேலை செய்யும் வேலைவாய்ப்பை அதிகரித்த ஐடி துறையினர்

கொரோனா தொற்றுப் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டு இருப்பதால் நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களை வீட்டில் இருந்த பணியாற்ற உத்தரவிட்டுள்ளது

இக்கொரோனா காலத்தில் இந்தியாவில் சில வர்த்தகம் மட்டுமே இயல்பாக நடந்து வரும் நிலையில் இதைத் தொடர்ந்து காப்பாற்றிக்கொள்ள அடுத்த சில மாதங்களுக்கு ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தி வருகிறது நிறுவனங்கள். ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்தாலும் வேலைத் திறனில் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்பது பல முன்னணி நிறுவனங்களின் கருத்தாக அமைகிறது.

இதன் எதிரொலியாகத் தற்போது இந்தியாவில் பல ஆயிரம் நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற ஊழியர்களை வலை வீசி தேடி வருகிறது.

தேடல் எண்ணிக்கை பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் வேலைவாய்ப்புத் தளத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வேலைவாய்ப்புகளுக்கான தேடல் 377 சதவீதம் அதிகரித்துள்ளதாக, இந்தியாவின் முன்னணி வேலைவாய்ப்பு தளமான Indeed தெரிவித்துள்ளது. அதிலும் முக்கியமான remote work மற்றும் work from home என்ற வார்த்தைகளுக்கான தேடல் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய விபரங்கள் இன்றைய நிலையில் Indeed தளத்தில் வேலைவாய்ப்புகளைத் தேடுவோர்களின் எண்ணிக்கையில் 83 சதவீதம் பேர் வீட்டில் இருந்து வேலை செய்யும் வேலைவாய்ப்புகளைத் தேடுவதாகவும், 53 சதவீதம் பேர் வீட்டில் இருந்து வேலை செய்யும் பட்சத்தில் தற்போது வாங்கும் சம்பளத்தையும் குறைத்துக்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் வழக்கம் இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நிறுவனங்களுக்கும் இதற்காகத் தயாராகி வருகிறது. வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களின் திறனை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்தும் நிறுவனங்களும் ஆய்வு செய்து வருகிறது.

கொரோனா காலத்தில் மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்து தவிக்கும் நிலையில், நிறுவனங்களும் வீட்டில் இருந்து வேலை செய்யும் சலுகையைக் கொடுத்துவிட்டுக் குறைவான சம்பளத்தில் ஊழியர்களைப் பணியில் அமர்த்தி வருகிறது. இது நாளிடைவில் பெரிய பிரச்சனையாக வெடிக்கக் காத்திருந்தாலும், தற்போது புதிதாகப் பல லட்சம் பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.