பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என கோரிக்கை

இந்தியா: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 2 வருடங்களாகவே 1 லிட்டர் ரூ. 100 -க்கும் மேல் விற்கப்பட்டு வருகிறது. தற்போதைய பொருளாதார சூழல், காய்கறிகளின் விலை அதிகரிப்பு ஆகியவற்றிக்கு மத்தியில் உயரும் பெட்ரோல், டீசலின் விலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனை அடுத்து பல்வேறு தரப்பினரும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலையை 35% குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு ஆண்டில் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை 35% குறைந்து உள்ளது. ஆனால் இந்தியாவில் இதன் விலை இன்னும் குறைந்தபாடில்லை.

இதையடுத்து இன்றைய நிலவரப்படி 1 லிட்டர் பெட்ரோல் ரூ. 102க்கும் டீசல் ரூ. 94.24-க்கும் விற்பனையாகி வருகிறது. அதனால் பொது மக்களின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு பெட்ரோலின் விலையை ரூ. 25 முதல் 30 குறைக்கலாம் என்று காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.