கேம் டெவலப்பருக்கு கொலை மிரட்டல் விடுத்த கேமரால் பரபரப்பு

கணினி மற்றும் கன்சோல்களில் வெளியாக இருந்த சைபர்பண்க் 2077 கேம் வெளியீடு மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இம்முறை இதன் வெளியீடு நவம்பர் 19 இல் இருந்து டிசம்பர் 10 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளதால், கேம் வெளியீட்டை தாங்க முடியாத கேமர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆதங்கத்தை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த கேமை உருவாக்கும் சிடி ப்ரோஜெக்ட் நிறுவன பங்குகள் வார்சா பங்கு சந்தையில் 5.25 சதவீதம் சரிவடைந்தது. தொடர்ந்து கேம் வெளியீடு தாமதமாகி வருவதால், ஒருத்தர் இந்த கேம் ஒருவேளை 2077 ஆண்டில் தான் வெளியாகுமா என கிண்டலாக கேள்வி எழுப்பி உள்ளார். இதுமட்டுமின்றி பலரும் கேம் டெவலப்பர்கள் குறித்து தவறான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிடி ப்ரோஜெக்ட் நிறுவனத்தின் மூத்த கேம்ஸ் டிசைனர் ஆண்ட்ரெஸ் வடஸ்கி கேம் பிரியர்களுக்கு பதில் அளித்துள்ளார். அதில், உங்களின் கோபம் எனக்கு புரிகிறது, விவகாரத்தில் உங்களது கருத்துக்களை வெளிப்படுத்த நீங்கள் நினைக்கின்றீர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், இருப்பினும் டெவலப்பர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது, மேலும் அது முற்றிலும் தவறான நடவடிக்கை. நாங்களும் உங்களை போன்று மனிதர்கள் தான் என்று கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.