தங்கம் மற்றும் வெள்ளியானது, 2023 புத்தாண்டில் இதை விட விலை உயர உள்ளதாக கணிப்பு

இந்தியா:2023 முதல் தங்கத்தை கனவில் தான் வாங்க முடியும் போல .... 2022 ஆண்டில் உலகம் முழுவதுமே பொருளாதார மந்த நிலை நிலவி கொண்டு வருகிறது. குறிப்பிட்டு இத்துறைகளுக்கு தான் பாதிப்பு என்று சொல்ல முடியாத அளவிற்கு, அனைத்து துறைகளையும் பொருளாதார சரிவு வாட்டிவருகிறது.

இந்த நிலையில், தற்போதைய பொருளாதார மந்த நிலை மற்றும் சீனாவின் ஜீரோ கோவிட் கொள்கை ஆகியறவற்றின் காரணமாக உலோகங்களின் விலையானது அதிக அளவில் அதிகரித்துள்ளது.

மேலும், விநியோக சந்தையில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள், குறிப்பாக, டாலரின் மதிப்பில் நடக்க இருக்கும் மாற்றம் காரணமாகவும் 2023ம் ஆண்டில் உலோகங்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ICICIdirect அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்நிலையில், வரும் புத்தாண்டில் 20 கிராம் தங்கத்தின் விலைரூ. 62,000 ஆகவும், வெள்ளி 1கிலோ ரூ.80,000 க்கும் விற்பனை செய்யப்படும் என கணிப்புகள் எழுந்துள்ளது. தங்கம், வெள்ளியை தவிர்த்து காப்பர், அலுமினியம், ஜிங்க் போன்றவற்றின் விலையும் உயரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.