2வது நாளாக சரிவை சந்தித்த தங்கம்

சென்னை: மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை தற்போது தங்கம் விலை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் குறிப்பிட்ட ஏற்றம் கண்ட தங்கம் விலை பட்ஜெட் தாக்கலின் முதல் நாளே அதன் அதிரடியாக உயர்ந்தது.

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏழை, நடுத்தர மக்கள் கவலை அடைந்தனர். ஆனால் நேற்று தங்கம் விலை வெகுவாக சரிந்து மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. நேற்று மாலை நேர நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.43,320க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து இந்நிலையில் இன்று காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. அதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.42,680க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.5,335க்கு விற்கப்படுகிறது. அதே சமயம் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.80 குறைந்து ரூ.74.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,200க்கு விற்கப்படுகிறது.