தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.208 குறைந்தது!

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த மாதம் 24-ந்தேதி ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று திடீரென்று தங்கம் விலை எகிறியது. ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 536-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த உயர்வு மூலம் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

இந்தநிலையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 குறைந்து ரூ.4692 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.208 குறைந்து ரூ.37536க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 39416 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை 40 பைசா குறைந்து ஒரு கிராம் 55.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது.