தங்கம் விலை பவுனுக்கு ரூ.96 குறைந்து!

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து, கடந்த மாதம் (ஜூன்) 24-ந்தேதி ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உயர்வை சந்தித்தது. அதன் பின்னர் ஏற்ற, இறக்கத்துடன் தங்கம் விலை காணப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.424 அதிகரித்து தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்ட நிலையில், நேற்று விலை குறைந்து காணப்பட்டது.

இந்தநிலையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து ரூ.4610 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.96 குறைந்து ரூ.36880க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 38728 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 20 பைசா குறைந்து 52.90 ரூபாய்க்கு விற்பனையாகிறது.