தங்கம் விலை ஒவ்வொரு நாளும் உயர்வு

சென்னை: மாறிவரும் பங்கு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்படுகிறது. அதுவும் தற்போது பொங்கல் பண்டிகை வேறு கொண்டாடப்படுவதால் நகை கடைகள் அனைத்தும் சலுகைகளை வாரி வழங்கி கொண்டு வருகின்றன. ஆனாலும் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே வருகிறது.

இதையடுத்து 22 கேரட் தங்கம் இன்று கிராம் 46 ரூபாய் அதிகரித்து ரூ.5269க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் 368 ரூபாய் அதிகரித்து ரூ.42,368க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.75 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் அதேபோன்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1000 உயர்ந்து ரூ.75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றே ஒரு சவரன் தங்கம் ரூ.42,000ஐ தொட்டதால் நகை வாங்க திட்டமிட்டவர்களும், நடுத்தரமக்களும் சோகத்தில் இருந்தனர்.

தற்போது விஷேஷ நாட்களிலும் நகை விலை தொடர்ந்து அதிகரித்து வருவது அனைவர் மத்தியிலும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.